திருமண ஜாதக பொருத்தம் - Thirumana Jathaga Porutham

பிரிவு: Astrology service

திருமண ஜாதகப் பொருத்தம் பார்ப்பதன் மூலம், மணமக்களின் எதிர்காலம், வாழ்க்கை அமைப்பு, இருவரின் ஒற்றுமை போன்றவற்றை அறிய முடிகிறது. மேலும், மணமக்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையுமா இல்லையா என்பதையும் அறிய முடியும்.

இதை அறிவதற்கு நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கணிதமே ஜோதிடமாகும். இக்கணிதத்தை யார் ஒருவர் சரியாக கணக்கிடுகிறாரோ அவரே சிறந்த ஜோதிடர். அந்த சிறந்த ஜோதிடர்கள் மூலம் உங்கள் மகள்களுக்கும், மகன்களுக்கும் ஒரு சிறந்த துணையுடன் அவர்களின் எதிர்காலத்தை அமைப்பதற்கு நாங்கள் உள்ளோம்.

இங்கு எப்படி திருமண பொருத்தம் (Thirumana Porutham) பார்க்கப்படுகிறது?

திருமண ஜாதகம் பொருத்தம் - Thirumana Porutham

எங்களிடம் வாக்கிய பஞ்சாங்கம் முறையில் கட்டத்தை வைத்து ஜாதகம் பார்க்கப்படுகின்றது. பொதுவாக அனைவரும் நட்சத்திரம், பத்து பொருத்தம் பார்ப்பார்கள். ஆனால் அது சரியாக இருக்காது. பத்து பொருத்தம் பார்ப்பதில் வெறும் 20% மட்டுமே சரியாக இருக்கும். அதை வைத்து திருமணம் செய்யக்கூடாது.

ஜாதக கட்டமானது 12 கட்டங்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு சிறப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும்.

உதாரணமாக, நான்காவது கட்டம் தாயின் கட்டமாகக் கருதப்படுகின்றது. தாய் வீடு என்றும் கூறலாம். நான்காவது வீடு உங்கள் தாயைப் பற்றி சொல்வதால், நான்காவது வீட்டின் அமைப்பைக் கொண்டு உங்கள் அம்மாவின் சந்தோஷம், நோய், கஷ்டம், வாழ்க்கை எனத் தாய் பற்றிய தகவல்களைத் தருகிறது. இது போக இந்த நான்காவது கட்டம் ஆனது வாகனம், வீடு, ஆபரணம், உடை போன்றவற்றைக் கூறுகிறது. உதாரணமாக, சிலர் வாழ்க்கையின் குறிக்கோளாக இடம் வாங்க வேண்டும் என நினைத்தாலும், இடம் வாங்கிய பிறகும் பெரிய அளவில் சந்தோஷம் கிடைக்காது. இன்னும் வாங்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கும். இத்தகைய தகவலை இந்த நான்காவது கட்டம் தருகிறது.

இதைப் போல், ஜாதகத்தில் உள்ள 12 கட்டங்களும் 12 விதமான பண்புகளைக் கொண்டுள்ளன.

திருமணத்திற்கு நட்சத்திர பொருத்தம் (Natchathira Porutham) மட்டும் பார்க்கலாமா?

திருமணத்திற்கு நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்க்கக்கூடாது. நட்சத்திர பொருத்தம் இருவரின் பொதுவான ஒற்றுமையைக் குறிக்குமே தவிர, அது முழுமையாக சரியாக இருக்காது. நட்சத்திர பொருத்தம் மட்டும் வைத்து திருமணம் நடத்தக்கூடாது. ஜாதக கட்டப் பொருத்தமும் பார்க்க வேண்டும்.

திருமணத்திற்கு பத்து பொருத்தம் (Pathu Porutham) ஏன் பார்க்கக்கூடாது?

நட்சத்திர பொருத்தத்தைப் போல் பத்து பொருத்தமும் மணமகன், மணமகளின் ஒற்றுமையை சரியாகக் கூறாது.

ஜாதக பொருத்தம் (Jathaga Porutham) எப்படி பார்க்க வேண்டும்?

"ஜாதகம் பொருத்தம்" — இதன் பெயரில் இருந்தே நாம் கூறலாம். இருவரின் ஜாதக கட்டத்தைக் கொண்டு பார்க்க வேண்டும். அதுவும் வாக்கிய பஞ்சாங்கம் முறையில் மட்டுமே பார்க்க வேண்டும். பெரும்பாலான ஜோதிடர்கள் திருக்கணித முறையில் பார்க்கின்றனர்.

ஜாதக கட்டத்தின் அதிபதிகள்

அனைத்து கட்டத்தின் அதிபதிகளை இங்கே பார்க்கலாம். ஜாதகம் மேஷத்திலிருந்து தொடங்கி மீனத்தில் முடிவடைகின்றது. இதில் மேஷம் மற்றும் விருச்சிகத்திற்கு செவ்வாய், ரிஷபம் மற்றும் துலாமிற்கு சுக்கிரன், மிதுனம் மற்றும் கன்னிக்கு புதன், கடகத்திற்கு சந்திரன், சிம்மத்திற்கு சூரியன், தனுசு மற்றும் மீனத்திற்கு குரு, மகரம் மற்றும் கும்பத்திற்கு சனி. ஜாதக பொருத்தத்தில் இந்த அதிபதிகள் எந்த வீட்டில் தற்சமயம் இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

ஜாதக கட்டத்தின் அதிபதிகள் - Jathaga Kattathin Athipathikal

திருமண பொருத்தம் பார்ப்பதற்கு மிக முக்கியமான கட்டம்

திருமண பொருத்தம் பார்ப்பதற்கு 7வது கட்டத்தைப் பார்க்க வேண்டும். ஏழாவது கட்டம் கணவனுக்கு மனைவியின் மீதும், மனைவிக்கு கணவன் மீதும் உள்ள அன்பு, இருவரின் காதல், இருவரின் ஒற்றுமை பண்புகளைக் கூறுகின்றது.

7வது கட்டம் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். 7வது கட்டம் எங்கே உள்ளது எனத் தெரிந்து கொள்ள முதலில் நம் ஜாதகத்தில் லக்னம் எங்கே உள்ளது எனப் பார்க்க வேண்டும். அதன் பின் அதிலிருந்து 7வது கட்டம் எங்கே உள்ளது எனப் பார்க்க வேண்டும். லக்னத்திலிருந்து 7வது கட்டம் எப்படி இருக்கிறது, யாருடைய பார்வை அதில் உள்ளது, 7வது கட்டத்தின் அதிபதி எங்கிருக்கிறார், அதிபதியுடன் யார் இருக்கிறார் எனப் பார்க்க வேண்டும்.

திருமண பொருத்தத்தில் 7வது கட்டம் - 7th House in Marriage Matching

இங்கு லக்னம் ஆனது ரிஷபத்தில் அமைந்துள்ளது. லக்னம் ஆனது ஜாதகரைப் பற்றிக் கூறும் இடமாகும். லக்னத்திலிருந்து 7வது இடம் விருச்சிகம். விருச்சிகத்தின் அதிபதி செவ்வாய் எங்கு உள்ளது, 7வது வீட்டில் யார் இருக்கிறார், அந்த அதிபதியுடன் யார் இருக்கிறார் என்பதைக் கொண்டு பார்க்கப்படும் மணமகன் அல்லது மணமகளுக்கு இடையிலான பந்தம் எப்படி இருக்கிறது எனத் திருமண ஜாதக பொருத்தத்தில் அறியலாம்.

இதுபோக குழந்தை பாக்கியம், வாழ்நாள் ஆயுள், மாமனார் மாமியார் மேல் உள்ள பாசம், குடும்பத்தை அனுசரித்துச் செல்லும் தன்மை என இரு மனங்களுக்கு இடையே எப்படி இருக்கும் என்பதை ஜாதகத்தில் அறிய முடியும்.

நட்சத்திர பொருத்தம் (Natchathira Porutham) என்றால் என்ன?

நட்சத்திர பொருத்தம் பார்ப்பது பொதுவான பலனை மட்டுமே தருவதால், அதைப் பார்த்து திருமணம் செய்து தவறான முடிவு எடுக்க வேண்டாம்.

நட்சத்திர பொருத்தத்தில் மொத்தம் இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் மற்றும் பன்னிரெண்டு ராசிகள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ராசிகளுக்கும் தனித்தனி சிறப்பம்சங்களும், அதனுடன் இணையக்கூடிய மற்றொரு நட்சத்திரங்களும் ராசிகளும் உள்ளன. இந்த இணைப்பைக் கொண்டு மணமக்களின் பொருத்தம் எவ்வாறு உள்ளது என்பதைப் பொதுவாக அனைத்து ஜோதிடர்களும் பார்க்கின்றனர்.

ஜாதகம் பொருத்தம் (Jathagam Porutham) - எங்கள் அணுகுமுறை

நாங்கள் வாக்கிய பஞ்சாங்கம் முறையில் கட்டத்தை அடிப்படையாகக் கொண்டு திருமண பொருத்தம் பார்க்கிறோம்.

எங்கள் பரம்பரை ஜோதிடர் உங்களுக்கு வேண்டிய பதிலைத் தவறுகளின்றி சரியாகக் கூறுவார்.

இந்த மணமகன், மணமகளைத் திருமணம் செய்தால் வாழ்க்கை ஆனது

  • இருவருக்கும் எப்படி இருக்கும்?
  • வாழ்க்கை சிறப்பாக இருக்குமா?
  • இருவரும் இணைந்து செல்வார்களா?
  • இருவருக்கும் குழந்தை பாக்கியம் எப்படி இருக்கிறது?
  • மாமியார், மாமனாரை அனுசரித்துச் செல்வார்களா?
  • திருமணத்திற்குப் பின் அவர்களின் வளர்ச்சி?
  • வாழ்க்கை இனிமையாக இருக்குமா?

என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

ஜாதக பொருத்தம் பார்ப்பதற்கு வேண்டியவை

இருவரின் பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் வேண்டும். அல்லது இருவரின் ஜாதக கட்டங்கள் இருந்தால் போதும்.

முடிவுரை

திருமண ஜாதக பொருத்தம் என்பது வாழ்நாள் முழுவதும் நிலைக்கும் ஒரு உறவை உறுதி செய்வதற்கான முதல் படியாகும். நட்சத்திர பொருத்தம் அல்லது பத்து பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்வது போதுமானதல்ல. ஜாதக கட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, வாக்கிய பஞ்சாங்கம் முறையில் முழுமையான பொருத்தம் பார்ப்பதே சிறந்தது. அனுபவமிக்க ஜோதிடரின் வழிகாட்டுதலில் ஜாதக பொருத்தம் பார்ப்பது, உங்கள் குடும்பத்தின் எதிர்கால மகிழ்ச்சிக்கான அடித்தளமாக அமையும்.